`அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, பதிலுக்காக 2 நாள் காத்திருப்பேன்' சுந்தர் பிச்சையின் பயணம்!

வாழ்வில் பயணித்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் ஓர் இனம்புரியாத இன்பம் இருக்கும். கடக்கவே முடியாத பாதையைக் கடந்திருக்கிறோம் என நிம்மதி இருக்கும். இப்படி கூகுள் நிறுவனம் கடந்து வந்த 25 ஆண்டுக் கால நினைவுகளை அசைபோட்டிருக்கிறார், சுந்தர் பிச்சை.

Google

இது குறித்து அவர் எழுதிய பிளாக்கில், “அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், முன்பெல்லாம் என்னுடைய தந்தையின் மெயிலுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் பதிலுக்காகக் காத்திருப்பேன். இந்த பதிலைப் பெறுவதற்கு 2 நாட்கள் ஆகும். `Dear Mr Pichai, email received. All is well’ என எனது தந்தை பதிலளிப்பார். 

மெயிலுக்கு பதிலளிக்க இவ்வளவு நேரம் ஏன் எடுத்தீர்கள் என்று கேட்டபோது, எனது சக ஊழியர் அலுவலக கம்ப்யூட்டரில் அந்த மெயிலை கொண்டுவந்து அச்சிட்டு, அதன் பின்னர் எனக்கு வழங்குவார். அதற்கு நான் பதிலளிப்பேன். அந்த பதிலை அவர் எழுதி, பின்னர் தட்டச்சு செய்து இறுதியில் எனக்கு வழங்குவார் என்று கூறினார். 

ஆனால், இப்போது நான் எனது மொபைலை எடுப்பதற்கு முன்னரே, எனது மகன் உடனே புகைப்படம் எடுத்து தனது நண்பர்கள் உடன் பகிர்ந்து சாட் செய்வதைப் பார்க்கையில், வாழ்க்கையும் தொழில்நுட்பமும் எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என வியப்பாக இருக்கிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Google

1990- களில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் முனைவர் பட்ட பெறும் மாணவர்களாக இருந்தபோது,  `கூகுள்’ ஒரு ஆராய்ச்சி திட்டமாக தொடங்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாகச் செப்டம்பர் 4, 1998 – ல் இருந்து செயல்படுத்தப்பட்டது.

இப்போது கூகுள் நெட்டிசன்கள் பயன்படுத்தும் முதன்மையான தளம். 2004-ல் கூகுளில் சேர்ந்த சுந்தர் பிச்சையின் பயணம்  இன்று வரை தொடர்கிறது. கூகுளின் வளர்ச்சிக்குச் சுந்தர் பிச்சையின் பங்கு முக்கியமானது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.