இட்லி, புலாவ், சமோசா, பானிப்பூரி, ரசகுல்லா: வெளிநாட்டு தலைவர்களுக்கு சுவையூட்டும் இந்திய உணவுகள்| From Chatpati Chaat to millet: World leaders to be served with all-veg menu at G20 Summit 2023 in Delhi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்பட்ட இட்லி, புலாவ், மற்றும் சமோசா, ரசகுல்லா பானிப்பூரி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில் ஜி20 மாநாடு வரும் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர், பிரிட்டன், கனடா, ஆஸி., சீனா பிரதமர் உள்ளிட்டோர் டில்லி வர உள்ளனர். அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதேநேரத்தில், மாநாட்டில் அவர்களுக்கு பரிமாறப்படும் உணவு வகைகள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளன. அவர்களுக்கான உணவு பட்டியலில் வெஜிடேரியன் உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. அதில், சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டின் இடையே, பிரதிநிதிகளுக்கு உள்ளூர் சிறந்த உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட உள்ளன.

அதிகாரப்பூர்வ விருந்தை தவிர்த்து, ஜி20 பிரதிநிதிகளுக்கு ஜெய்ப்பூரில் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் சிறுதானியங்களுக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

உணவு விபரம்

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா., சபை அறிவித்து உள்ளது. இதன் அடிப்படையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் குழுவினருக்கு வழங்கப்படும் உணவுப்பட்டியலில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட தாளி, புலாவ், இட்லி ஆகியவை முக்கியமாக இடம்பெறும் என தெரிகிறது.

மேலும், ராஜஸ்தானின் தால் படி சர்மா, மே.வங்கத்தின் ரசகுல்லா, தென் இந்தியாவின் மசால் தோசை, பீஹாரின் லிட்டி சோக்கா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு உணவுகளும் மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடையே பரிமாறப்பட உள்ளது.

இதை தவிர்த்து, பானி பூரி, சப்பாத்தி சாத், தஹி பல்லா, சமோசா ஆகியவையும் ஜி20 பிரதிநிதிகளின் உணவு பட்டியலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.