நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ,ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸி.யின் மாத்யூ எப்டென் ஜோடி அபாராமாக ஆடி பைனலுக்குள் நுழைந்தது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா,l ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 7-6, 6-1 என அமெரிக்காவின் நதானியேல் லமன்ஸ், ஜாக்சன் வித்ரோ ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து நேற்று லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் மைதானத்தில் நடந்த அரையிறுதியில் பிரான்சின் நிக்கோலஸ் மஹத் – ஹியூஸ் ஹெர்பர்ட் ஜோடியை, போப்பண்ணா- மாத்யூ எப்டென் ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அசத்தலாக பைனலுக்குள் நுழைந்தது.
இதன் மூலம் யு.எஸ். ஓபனில் முதன்முறையாக மிகவும் வயதான இந்திய வீரர் பைனலுக்கு தகுதி பெற்றதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement