
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் காயத்ரி யுவராஜ் விலகல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் ஏற்கனவே மூத்த நடிகை அர்ச்சனாவும் ஹீரோயினாக நடித்து வந்த மோக்ஷிதாவும் விலகினர். இந்நிலையில், யமுனா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காயத்ரி யுவராஜ் தற்போது சீரியலை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் காயத்ரி யுவராஜ் இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். அவருக்கு தற்போது நிறைமாதம் என்பதால் பிரசவ காலத்தை கருத்தில் கொண்டு தொடரிலிருந்து விலகியுள்ளார். காயத்ரிக்கு பதிலாக காவ்யா பெல்லு இனி யமுனா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.