Tecno Spark 10 Pro Moon Explorer Edition 11,999 ரூபாய் விலையில் இந்தியாவில் வெளியீடு! 50MP AI கேமரா உள்ளிட்ட அல்டிமேட் சிறப்பம்சங்கள்!

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் ன் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக Tecno Spark 10 Pro Moon Explorer எடிசன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள், அதன் செயல்பாடுகள், விலை உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Tecno Spark 10 Pro Moon Explorer ப்ராசஸர்Tecno Spark 10 Pro Moon Explorer-ல் 12nm process Octa-Core MediaTek Helio G88 ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் HiOS 12.6, based on Android 13 அடிப்படையில் இயங்குகிறது.
​Tecno Spark 10 Pro Moon Explorer கேமராTecno Spark 10 Pro Moon Explorer மொபைலில் f/1.6 aperture உடன் கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா,AI லென்ஸ் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த போட்டோவுக்காக Dual LED flash ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 32 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா முன்புறம் வழங்கப்பட்டுள்ளது.
Tecno Spark 10 Pro Moon Explorer சார்ஜிங் வசதி மற்றும் ஸ்டோரேஜ்Tecno Spark 10 Pro Moon Explorer மொபைலில் 5000mAh திறன் பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றிருக்கிறது. மேலும் இந்த மொபைல் 8GB LPDDR4x ரேம் + 128GB ஸ்டோரேஜ் வசதியில் வெளியாகியுள்ளது. இதன் ஸ்டோரேஜ் வசதியை 1TB வரை நீட்டித்து கொள்ளலாம்.
​Tecno Spark 10 Pro Moon Explorer விலைTecno Spark 10 Pro Moon Explorer மொபைலின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வசதி வேரியண்ட்டின் விலை 11,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது முன்பதிவு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 15 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
​Tecno Spark 10 Pro Moon Explorer டிஸ்பிளே மற்றும் நிறங்கள்Tecno Spark 10 Pro Moon Explorer -ல் 6.78 இன்ச் HD+ Dot-in (1080 X 2400 பிக்ஸல்ஸ்) டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.