சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம் செய்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை கலெக்டர் உள்பட 4 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடத்து, சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். […]