சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு மலேரியாவை போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாஜக உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆ ராசா சனாதனம் என்பது ஹெச்ஐவி, தொழுநோய் போல என கடுமையாக சாடினார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆ ராசாவை விளாசியுள்ளார் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி. மேலும் திடீரென்று சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின், ஆ ராசா மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பேசுவதற்கான காரணம் குறித்தும் டிவிட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறதா? நடிகை கஸ்தூரி பேட்டி!
அவர் பதிவிட்டிருப்பதாவது, திடீரென்று சனாதனம்: உதயநிதியின் பேச்சு ஒரு தடவை என்று நினைத்தீர்களா? ஆ.ராஜா, முதல்வர் ஸ்டாலின் போன்றவர்கள் அடுத்தடுத்த சனாதனம் குறித்து பேசுவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வேண்டுமென்றே இந்துத்துவா எதிர்ப்புக் கதையை அமைக்கிறது என்பதைக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வெறுப்பு பிரச்சாரத்தை தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏன் ஆதரிக்கிறார்கள்? என்றும் நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க் கட்சியாக நிலைநிறுத்தவும், தி.மு.க.வின் முக்கிய எதிரியான அ.தி.மு.க.வின் தொடர்பை குறைப்பதற்குதான் இது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். சிலர் பா.ஜ.க.வுக்கு சாதகமாக தி.மு.க செயல்படுகிறது என்று கூட சிலர் கூறலாம் என்றும் இந்த ஸ்ட்ராடெஜிக்கு நீண்டகால அஜந்தா இருக்கலாம் என்றும் கஸ்தூரி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அளவில், திமுகவின் சனாதன எதிர்ப்பு நிலை இந்தியாவில் உள்ள இந்துக்களைப் பாதிக்கப் போவதில்லை என்றும் ஆனால் ஐ.என்.டி.ஐ.ஏ பாதிக்கப்டலாம் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவையும் விளாசியுள்ளார் கஸ்தூரி.
அதாவது, இளவரசருக்கு டெங்கு கொரோனா… ராஜாவுக்கு எய்ட்ஸ் தொழுநோய். பொருத்தம்தான் என்று நக்கலடித்துள்ளார். மேலும் ஊழல் அழிப்பு , பலதாரமணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா? ஹூம் . பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும் என்றும் நடிகை கஸ்தூரி சாடியுள்ளார்.