தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்த மாரிமுத்து இன்று காலை உயிரிழந்தார். 35 வருட சினிமா வாழ்வில் சமீப காலமாதான் தன்னை அனைவரும் அங்கீகரிப்பதாகவும் தனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இப்போது அவரின் மறைவு குடும்பத்திற்கு பெரிய துன்பத்தை ஏற்படுத்தயுள்ளது.
நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
RIP Thiru. Marimuthu : அவர் மறைவு தமிழ் சினிமாவின் பெரிய இழப்பு ! தமிழ் சினிமாவில் மாரிமுத்து
எதிர்நீச்சல் தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் அவருக்கான ஷாட் முடிந்துவிட்டால், தனது அடுத்த வேலையை நோக்கி போய்விடுவார் மாரிமுத்து. இரவும் பகலுமாக தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துபவர்தான் மாரிமுத்து. சமீப காலமாக அதிக சினிமாவில் நடித்து வந்த இவர், எதிர்நீச்சல் தொடரின் படப்பிடிப்பை முடித்தவுடன் படங்களின் படப்பிடிப்பிற்கு சென்று அங்கு வேலை பார்ப்பார். இதெல்லாம் தனது குடும்பத்திற்காக செய்வதாகவும் அவர் கூறுவார்.
மாரிமுத்து அவர்களின் குடும்பம்
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
35 வருடங்களாக சினிமாவில் இருந்த இவருக்கு 1994ல் பாக்கியலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. திருமணம் ஆனா அன்று முதல் அவரது மனைவி என்றாவது ஒரு நாள் கணவர் ஜெய்த்துவிடுவார் என நம்பிக்கையோடு சொல்லுவாராம். திருமணமான அடுத்த ஆண்டில் இவரின் மகன் பிறந்தார். 2000த்தில் இவரின் மகளும் பிறந்தார். அவர்கள், அவர்களது சிறு வயதிலிருந்தே அப்பா எப்படியாவது ஜெய்த்துவிடுவார் என ஏங்கி பேசுவார்களாம். அவரது மனைவி திருமணமான 27 ஆண்டுகளாக இவரின் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். இவரின் மீது அதிக நம்பிக்கை வைத்து இவ்வருடன் பயணித்துள்ளார்.
மாரிமுத்துவின் மனைவி
எதிர்நீச்சல் உடன் இன்னும் பல படங்களின் வாய்ப்பு கிடைத்ததால் இப்போது அவரின் குடும்பம் மிகவும் ஆனந்தமாக இருப்பதாகவும், அவரகளின் முகத்தில் இந்த ஆனந்த சிரிப்பை பார்க்க அவர் இன்னும் அதிகமாக உழைப்பதற்கு தயார் எனவும் கூறியுள்ளார். எதிர்பாராத அவரின் இந்த இழப்பு அவரின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Guest Author : Radhika Nedunchezhian