கோஃல்ப் விளையாட்டில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்த தோனி! சகலகலா வல்லவன் தல வீடியோ வைரல்

Craze Of Cricketer Dhoni: தோனியை யாருக்கும் தெரியாதா?’: டொனால்ட் டிரம்புடன் தல கோல்ஃப் விளையாடியது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. தோனியின் ஆர்வத்திற்கு எல்லையே இல்லை என்று விளையாட்டாக சொன்னாலும் அவர் தனது வாழ்க்கையை மனதிற்கு பிடித்தபடி ஜாலியாக அனுபவித்து வாழ்கிறார்.  

எம்.எஸ். தோனி எதிர்பாராத விஷயங்களில் தனது ஆர்வம் மற்றும் விருப்பத்தை நிறைவேற்றுவதில் பெயர் பெற்றவர். அவர் அடிக்கடி அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். இந்த முறை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடினார்.

MS Dhoni playing golf with Donald Trump.

– The craze for Dhoni is huge. pic.twitter.com/fyxCo3lhAQ

— Johns. (@CricCrazyJohns) September 8, 2023

அமெரிக்க முன்னாள் அதிபரும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப், தல தோனியுடன் கோல்ஃப் விளையாடிய வீடியோ, தோனியின் கோல்ஃப் விளையாட்டு விளையாடும் திறனையும் காட்டியது.

கோல்ஃப் விளையாடிய தோனி
அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அங்கு நடந்த கோல்ஃப் போட்டியில் கலந்து கொண்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அழைத்ததின் பேரில் அவருடன் இணைந்து கோல்ஃப் விளையாடிய தோனி வெற்றி பெற்றார். 

இந்த நட்பு ரீதியான போட்டியின் ஒரு காட்சியை, துபாயைச் சேர்ந்த தொழிலதிபரும், தோனியின் நண்பருமான ஹிதேஷ் சங்வி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் வீடியோ
தற்போது டிரம்ப் மற்றும் தோனி ஆகியோரின் புகைப்படம், விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நட்பு ரீதியான கோல்ஃப் போட்டியில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை தோனி தோற்கடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தோனி தனக்கு பிடித்த நீண்ட தலைமுடியுடன் இருக்கிறார் என்றால், முன்னாள் அதிபர் டிரம்ப் தனது வழக்கமான MAGA தொப்பியை அணிந்திருந்தார். இவர்களது புகைப்படங்கள் மட்டுமல்ல, கோல்ஃப் போட்டியின் பரபரப்பான வீடியோவும் இணையத்தில் பரவியது. இருப்பினும், இந்த எதிர்பாராத சந்திப்பு சமூக ஊடகங்களில் வெறித்தனமாக வைரலானது.

இந்த இரண்டு பிரபலங்களின் தனித்துவமான கதைகள் மற்றும் சாதனைகளும் தற்போது இணையத்தில் அதிகம் தேடப்படுகிறது. எளிமையான தொடக்கத்திலிருந்து இந்திய கிரிக்கெட்டின் சின்னமான முகமாக மாறிய எம்.எஸ் தோனியின் இந்த பயணம் இந்தியாவில் உள்ள ரசிகர்களை ஊக்கப்படுத்தியது.

யுஎஸ் ஓபன் 2023 காலிறுதிப் போட்டியில் தோனி

கார்லோஸ் அல்கராஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையேயான யுஎஸ் ஓபன் 2023 காலிறுதிப் போட்டியில் தோனி கலந்துகொண்ட படங்கள், சில நாட்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், தற்போது இந்தப் படங்களும் வீடியோக்களும் வெளிவந்தன.

இது, தோனியின் பல்துறை விளையாட்டு ஆர்வங்களை வெளிப்படுத்துகின்றன. மேலும் இதுபோன்ற மதிப்புமிக்க நிகழ்வுகளில் அவரது இருப்பு அவரது பன்முக ஆளுமையை உணர்த்துகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.