புதுடெல்லி: ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரத்தை 3-வது முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகரித்துள்ளனர். சூரியனை ஆய்வு செய்வதற்கு, கடந்த 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் , பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது.
தற்போது ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரத்தை 3-வது முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகரித்துள்ளனர். அதன்படி, சூரியனில் இருந்து குறைந்தபட்சம் 296 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 71,767 கிலோ மீட்டர் தூரத்திலும் விண்கலம் சுற்றி வருகிறது. இதனை தொடர்ந்து கண்காணித்து வரும் விஞ்ஞானிகள், வரும் 15 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு 4 ஆவது முறையாக புவி சுற்று வட்டப்பாதை அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
ஆதித்யா-எல்1 என்பது சூரியனைப் பற்றிய விரிவான ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும், இது சூரியனைப் பற்றிய அறியப்படாத உண்மைகளைக் கண்டறியும். இந்த செயற்கைக்கோள் 16 நாட்களுக்கு பூமியின் சுற்றுப்பாதையில் பயணிக்கும், அதன் போது அதன் இலக்கை அடைய தேவையான வேகத்தைப் பெற ஐந்து முறை சுற்றுவட்டப்பாதை உயரங்கள் மாற்றப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அடியா-எல்1 டிரான்ஸ்-லக்ராஞ்சியன்1 இன்செர்ஷன் சூழ்ச்சிக்கு உட்படும், இதற்கு 110 நாட்கள் எடுக்கும். L1 புள்ளியை அடையும் பயணத்தில், தோராயமாக 15 மில்லியன் கிலோமீட்டர்கள் செயற்கைக்கோள் பயணிக்கும்.
இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.
தற்போது மூன்றாவது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் இன்னும் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 15ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சூரியப் பணியின் முக்கிய நோக்கங்கள்
சூரியக் கரோனாவின் இயற்பியல் மற்றும் அதன் வெப்பமூட்டும் பொறிமுறை, சூரியக் காற்றின் முடுக்கம், சூரிய வளிமண்டலத்தின் இணைப்பு மற்றும் இயக்கவியல், சூரியக் காற்றின் பரவல் மற்றும் வெப்பநிலை அனிசோட்ரோபி மற்றும் கரோனல் மாஸ் எஜெக்ஷன்களின் (CME) தோற்றம் ஆகியவற்றை ஆய்வதே ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதன் நோக்கம் ஆகும்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரும் நிலையில், 125 நாட்களில் எல் 1 புள்ளியை அடைந்து சூரியனை ஆய்வு செய்யத் தொடங்கும்.நிலவைத் தொடர்ந்து சூரியனையும் வெற்றிகரமாக ஆய்வு செய்யும்.