20-ம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்!
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1677159270870.jpg)
“புதுச்சேரியில் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 20-ம் தேதி கூடுகிறது.” – சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_10_at_10_25_47.jpeg)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_10_at_10_26_12.jpeg)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_10_at_10_26_09.jpeg)
அ.தி.மு.க தலைமைக் கழக எம்.ஜி.ஆர் மாளிகையில் நாளை (10.09.2023) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்றைய தினத்துக்கு திடீரென மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
`இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது!’ – முதல்வர் ஸ்டாலின்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/64d1f468041db.jpg)
“ `எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகளை இரண்டு ஆண்டுக்காலத்தில் மீட்டது தி.மு.க அரசு.
இன்றைய நாள், 1,000-வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்குக் காரணமான மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!” – சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு