வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்சதா மூர்த்தியுடன், டில்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
டில்லியில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வந்துள்ளார். நேற்று மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றார். இரண்டாவது நாளான இன்று(செப்.,10) ஜி20 தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினர்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/gallerye_111256402_3428060.jpg)
அதற்கு முன்னதாக சுவாமிநாராயணன் அக்ஷர்தம் கோயிலுக்கு ரிஷி சுனக்கும், அக்சதா மூர்த்தியும் வந்தனர். அங்கு கோயில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பிறகு அங்கு, வழிபட்டதுடன், சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தை சுற்றிப்பார்த்தனர். அவர்களுக்கு நிர்வாகிகள் கோயில் கட்டமைப்பு குறித்து நிர்வாகிகள் விளக்கி கூறினர்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/gallerye_11130343_3428060.jpg)
பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், உலகத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக வேண்டி கொண்டதாக கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement