Tata Nexon.ev Variants – 2023 டாடா நெக்ஸான்.இவி வேரியண்ட் வாரியான வசதிகள்

இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் கார் நெக்ஸானின் புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸான்.ev காரின் விலை செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், க்ரீயோட்டிவ் +, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+, ஃபியர்லெஸ்+ S, எம்பவர்டூ மற்றும் எம்பவர்டூ+ என 6 வேரியண்டுகளை பெற்றுள்ளது.

நெக்ஸான்.இவி எலெக்ட்ரிக் காரின் Long Range (LR) வேரியண்டுகளில் காரின் பவர் 142 bhp மற்றும் 215Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 465 கிமீ பயணிக்கலாம்.

Medium Range (MR) வேரியண்டில் 30 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 215 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 325 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நெக்ஸான்.இவி டாப் ஸ்பீடு 150KMPH ஆக உள்ளது. இந்த மாடலுக்கு போர்ட்டபிள் சார்ஜர், 7.2kWh சார்ஜர் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளிட்ட சார்ஜிங் விருப்பங்களும் வழங்குகின்றது.

Tata Nexon.ev Creative+

 Medium Range வேரியண்டில் மட்டும் வரவுள்ளது

  • அனைத்தும் எல்இடி விளக்குகள்
  • ஆறு ஏர்பேக்
  • EBD மற்றும் ESP உடன் ABS
  • ரீஜெனேரேட்டிவ் பேடில் ஷிஃப்டர்
  • 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 7.0 இன்ச் வகையிலான லோகோவுடன் இரண்டு-ஸ்போக் ஸ்டீயரிங்
  • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
  • ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல்
  • என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
  • டிரைவிங் மோடு (City, Sport, and Eco)
  • அட்ஜெஸ்டபிள் ORVM
  • டெயில்கேட்டிற்கான எலக்ட்ரிக் மூலம் செயல்பாடு
  • உயரத்தை சரிசெய்யக்கூடிய முன்புற இருக்கைகள்
  • 3.3kW சார்ஜர்
  • ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு

nexon.ev

Tata Nexon.ev Fearless

 Medium Range மற்றும் Long Range என இரண்டிலும் ஃபியர்லெஸ் கிடைக்கும். க்ரீயேட்டிவ்+ வசதிகளுடன் கூடுதலாக,

  • எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்
  • எல்இடி லைட் பார்
  • கார்னரிங் ஒளிரும் தன்மையுடன் பனி விளக்கு
  •  16-இன்ச் அலாய் வீல்
  • 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட்
  • 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • நான்கு ஸ்பீக்கர் மற்றும் நான்கு ட்வீட்டர்கள்
  • ரியர் வைப்பருடன் வாஷர்
  • 45W டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • பின்புற ஏசி வென்ட்
  • V2V சார்ஜிங் (LR)
  • V2L தொழில்நுட்பம் (LR)
  • ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு கொண்ட EPB (LR)
  • 4 டயர்களிலும் டிஸ்க் பிரேக்கு (LR)
  • 7.2kW AC ஃபாஸ்ட் சார்ஜர் (LR)

new tata nexon ev interior 1

Tata Nexon.ev Fearless+

 Medium Range மற்றும் Long Range என இரண்டிலும் ஃபியர்லெஸ்+ கிடைக்கும். ஃபியர்லெஸ் வசதிகளுடன் கூடுதலாக,

  • ஆர்கேட்.ஈ.வி
  • ஆடியோவர் எக்ஸ்
  • முன் ஆர்ம்ரெஸ்ட்
  • வயர்லெஸ் சார்ஜர்
  • க்ரூஸ் கண்ட்ரோல்

Tata Nexon.ev Fearless+ S

 Medium Range மற்றும் Long Range என இரண்டிலும் ஃபியர்லெஸ்+ S கிடைக்கும். ஃபியர்லெஸ்+ வசதிகளுடன் கூடுதலாக,

  • மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்
  • ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்
  • குரல் உதவியுடன் செயல்படும் எலக்ட்ரிக் சன்ரூஃப்

nexon electric car

Tata Nexon.ev Empowered

 Medium Range மட்டும் எம்பவர்டூ கிடைக்கும். ஃபியர்லெஸ்+ S வசதிகளுடன் கூடுதலாக,

  • எல்இடி விளக்கு மூலம் வெல்கம் மற்றும் குட்பை அம்சம்
  • சார்ஜிங் இன்டிகேட்டர்
  • 4 ஸ்பீக்கர், 4 ட்வீட்டர் மற்றும் 1 சப்வூஃபர்
  • 360 டிகிரி கேமரா
  • முன் பார்க்கிங் சென்சார்
  • ஏர் ப்யூரிஃபையர்
  • ஆட்டோமேட்டிக் IRVM
  • காற்றோட்டம் வசதி கொண்ட லெதேரேட் இருக்கை
  • 60:40 பின் இருக்கை வசதி
  • இரண்டாவது வரிசைக்கான ஆர்ம்ரெஸ்ட்

Tata Nexon.ev Empowered+

long range மட்டும், எம்பவர்டூ வசதிகளுடன் கூடுதலாக

  • 12.3-இன்ச் தொடுதிரை அமைப்பு
  • SOS அழைப்பு

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி டாடா நெக்ஸான் மற்றும் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு வரவுள்ளது. தற்பொழுது இரண்டு மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

tata nexon.ev rear view

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.