நடிகர் மாரிமுத்துவுக்கு 'வானத்தைப் போல' சீரியல் குழுவினர் மவுன அஞ்சலி!
பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி வெள்ளித்திரையும் சின்னத்திரையும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‛வானத்தைப் போல' சீரியல் குழுவினர் நேற்று ஷூட்டிங் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாரிமுத்துவின் ஆன்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தாருக்கு பலத்தை தரவும் வேண்டி வானத்தைப் போல தொடரின் ஹீரோ ஸ்ரீகுமார் தனது செட்டில் இருக்கும் சக நடிகர்களையும், வேலை செய்பவர்களையும் ஒரு நிமிடம் மவுனம் காக்குமாறும் கேட்டுக்கொள்ள அனைவரும் மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.