இந்தாண்டும் டில்லியில் பட்டாசு வெடிக்க தடை| Firecrackers banned in Delhi this year too

புதுடில்லி: டில்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்டர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டில்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. டில்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.