கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல் சதம் விளாசினர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த ‘சூப்பர்-4’ போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா (56 ரன்கள்), சுப்மன் கில் (58 ரன்கள்) இருவரும் அரைசதம் அடித்து நல்ல துவக்கம் தந்தனர். பின்னர் கோஹ்லி – ராகுல் ஜோடி சேர்ந்தனர்.
அணியின் ஸ்கோர் 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் என்றிருந்தபோது, மழை கொட்டி தீர்த்தது. இதனால் போட்டி ‘ரிசர்வ்’ நாளான இன்று மாற்றப்பட்டது. இன்று, நிறுத்தப்பட்டதில் இருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தொடர்ந்த போட்டியில் லோகேஷ் ராகுலும், விராத் கோஹ்லியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அமர்களப்படுத்திய இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.
லோகேஷ் ராகுல், விராத் கோஹ்லி இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் கோஹ்லி 122 ரன்கள், ராகுல் 111 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
இதையடுத்து 357 ரன்கள் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்க உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement