வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரீஸ்: இண்டியா என்ற பெயர் பா.ஜ.வுக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது என காங். எம்.பி., ராகுல் கூறினார்.
பிரான்ஸ் சென்றுள்ள காங்., எம்.பி.,ராகுல், அங்கு ஆராய்ச்சி மாணவர்கள், இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடினார்.
அவர் கூறியது, இந்தியாவில் ஆளும் அரசு ஆட்சி அதிகாரத்திற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.,வின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கீதையை நான் படித்து விட்டேன். பல இந்து புத்தகங்களை படித்து விட்டேன். இந்து என்று பா.ஜ., சொல்லும் எவையும் உண்மையில் இந்து மதத்தில் இல்லை.
இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரத் என இரு பெயர்களும் உள்ளன. இரு
பெயர்களால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிக்
கூட்டணிக்கு இண்டியா என்ற பெயர் பா.ஜ.,வுக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளதால்
அவர்கள் பெயரை மாற்ற முயற்சிக்கிறார்கள்.நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement