மாண்டியா : ”சனாதன தர்மம் அனைத்துக்கும் அடிப்படையாகும். தமிழக அமைச்சர் உதயநிதி கூறியதை, ஏற்க முடியாது,” என, மைசூரு அரச குடும்பத்தின், யதுவீர் கிருஷ்ண தத்த உடையார் தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
அனைத்து தர்மத்துக்கும், ஒரு விதமான கவுரவம், மரியாதை உள்ளது. யாராக இருந்தாலும், முதலில் தர்மத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
நமது மாநிலம் மற்றும் நாட்டில், சனாதன தர்மம் அனைத்துக்கும் அடிப்படையானது.
இத்தகைய தர்மத்தை பற்றி, தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதை, ஏற்க முடியாது. தவறான கருத்துகள் ஏற்படும் வகையில் பேசுவது தவறு.
கே.ஆர்.எஸ்., அணை விஷயத்தில், உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். ஆட்சி நடத்துவோரிடம் கேள்வி எழுப்புவோம்.
இம்முறை தசரா திருவிழா, மிகவும் சிறப்பாக நடக்கும். மஹிஷா தசரா கொண்டாடுவது குறித்து, என் கருத்து எதுவும் இல்லை. அவரவர் விருப்பப்படி வழிபடலாம்.
எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. சமுதாயத்துக்கு நல்லது செய்ய, அரசியல் அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement