வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ”இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டத்தில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்படும்,” என, அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஏப்., – மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வை வீழ்த்த, காங்., – திரிணமுல் காங்., – தி.மு.க., உள்ளிட்ட, 26 கட்சிகள் இணைந்து, ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இக்கூட்டணியின் மூன்று ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ள நிலையில், வரும் 13ம் தேதி, புதுடில்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டில், ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மனோஜ் ஜா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வரும், 13ல் நடக்கவுள்ள ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மிக முக்கியமானது. இக்கூட்டத்தில் பிரசாரங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்படும்.
கூட்டம் நடக்கும் நாளில் விசாரணைக்கு ஆஜராகும்படி, அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அரசியல் ரீதியாக எங்களிடம் மோத தைரியம் இல்லாததால், விசாரணை அமைப்புகளை, மத்திய பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இதையெல்லாம் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம். அனைத்துக்கும் தயாராகத்தான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement