சனாதனத்திற்கு எதிராகப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலகக் கோரியும் பா.ஜ.க., மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அந்த அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பா.ஜ.க.,வினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் தள்ளுமுள்ளும் பரபரப்பும் ஏற்பட்டது. அதையடுத்து தடையை மீறி முற்றுகைப் போராட்டத்திற்கு முயன்றதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/IMG_20230911_WA0023.jpg)
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு, கொரோனா போல ஒழிப்பேன்னு சொன்னா என்ன அர்த்தம். 80 சதவிகித இந்துக்களை இனப் படுகொலை செய்வேன் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். அவரை இன்னும் கைது செய்யலை. அப்படியிருக்க, இங்கு இருக்கக்கூடிய போலீஸ்காரர்கள் எல்லாம் இந்த போலீஸ் உடையை அணிய தகுதியே இல்லாதவர்கள். இதே வார்த்தையை நான் சொல்லியிருந்தா விட்ருப்பாங்களா.
சர்க்கார்கிட்ட சம்பளம் வாங்குற நேர்மையான போலீஸா இருந்தா, 24 மனி நேரத்துக்குள்ள உதயநிதி ஸ்டாலினை அரஸ்ட் பண்ணியிருப்பாங்க. அதை செய்யாம, எந்தத் தப்பும் பண்ணாத என்னை புடிக்க வந்திருந்தா என்ன அர்த்தம்?… காவல்துறையில் இருந்த உணர்வுள்ள போலீஸார் இப்போது இல்லை. உதயநிதியின் கைக்கூலிகளாக அடிவருடிகளாகத் தான் இருக்கின்றனர். இந்துக்களை இனப்படுகொலை செய்வேனென்று சொன்ன உதயநிதி ஸ்டாலினை, அடியோடு அரசியல் களத்திலிருந்து நீக்குகின்ற வரை எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/628503e82f520.webp.jpeg)
தொடர்ந்து பேசியவர், “பொய்களை உண்மையாக பேசுகின்ற ஒரு தீயவர் கூட்டம் தான் திராவிடர் இயக்கம். சின்மயி கொடுத்த மீ டு விவகாரத்தில் வைரமுத்து மேல் எந்த நடவடிக்கையுமே எடுக்கலை. ஆண்டாள் பத்தி வைரமுத்து பேசுனது தப்புன்னு தீர்ப்பு இருக்கு. ஆனா, கைது செய்ய மாட்டாங்க. இதுக்கெல்லாம் ஒரு காலம் வரும். திராவிட இயக்கங்களே இல்லாமல் அழித்து, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது போலீஸாரின் யூனிபார் கலரைக் கூட மாற்றுவோம். யூனிபார்ம் கலர் அரசாங்கம் வைக்கிறது தானே! காவி தான் காவல்துறையினருக்கு யூனிபார்ம்ன்னு அன்னைக்கு சொன்னா என்ன பண்ண முடியும்?” என்று ஆவேசமானார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY