ரூ.1.18 கோடியில் ஆடி க்யூ8 லிமிடேட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஆடி நிறுவனம் சிறப்பு லிமிடேட் எடிசன் Q8 எஸ்யூவி மாடலை 1.18 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில், கருப்பு, வெள்ளை மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கின்றது.

கிரில் அமைப்பில் புதிய செருகல்கள் கொண்டு எல்இடி ஹெட்லைட் பெற்று பகல்நேர ரன்னிங் விளக்குகள் கொண்டுள்ளன.

Audi Q8

3.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பெற்று 48V மைல்ட் ஹைப்ரிட் அமைப்பு கொண்டுள்ளது. அதிகபட்சமாக 340hp பவர் மற்றும் 500Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. எட்டு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. Q8 எஸ்யூவி 5.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்ட முடியும் மற்றும் டாப் ஸ்பீடு 250 கிமீ வேகமாக வரைறுயறுக்கப்பட்டுள்ளது.

10.1-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் மற்றும் 8.5-இன்ச் யூனிட் HAVC அமைப்புடன், விர்ச்சுவல் ரியாலிட்டி காக்பிட் டிஜிட்டல் திரையையும் பெறுகிறது. மற்ற அம்சங்களில் Bang & Olufsen ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், நான்கு-மண்டல ஏசி கட்டுப்பாடு மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு அம்சங்களில் 8 ஏர்பேக்குகள், ESP, ஆடி ப்ரீ-சென்ஸ் அடிப்படை, ஆடி பார்க் அசிஸ்ட், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் பார்க்கிங் எய்ட் பிளஸ் ஆகியவை உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.