Honda Elevate – ஹோண்டா எலிவேட் எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு

ஹோண்டா கார்ஸ் அறிமுகம் செய்த காம்பேக்ட் எஸ்யூவி எலிவேட் மாடல் அமோக வரவேற்பினை பெற்று டாப் வேரியண்டுகளான VX மற்றும் ZX என இரண்டுக்கும் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

மற்ற ஆரம்ப நிலை வேரியண்டுகளான SV, மற்றும் V என இரண்டும் அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Honda Elevate

ஹோண்டா எலிவேட் முன்பதிவுகளில் சுமார் 60 சதவீதம் VX மற்றும் ZX வேரியண்டுக்கு பெற்றிருப்பதாக ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில், எலிவேட் ZX சிவிடி, கொண்ட kuu போட்டியாளர்களிடையே டாப்-எண்டில் மிகவும் மலிவான தானியங்கி நடுத்தர அளவிலான எஸ்யூவி ஆகும்.

1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.

எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் ஹோண்டா நிறுவனம் 100  எலிவேட் கார்களை ஒரே சமயத்தில் டெலிவரி செய்துள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களில் டெலிவரி துவங்க உள்ளது.

மேலும் படிக்க – 11 லட்சத்தில் ஹோண்டாவின் எலிவேட் சிறப்புகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.