மாஸ்கோ: ‛ மேக் இன் இந்தியா ‘ திட்டத்தை பாராட்டி உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாடம் படிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இந்தியாவில் வளர்ச்சியை ஏற்படுத்தவும், உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ‛ மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதனிடையே, உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‛மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‛‛ உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரதமர் மோடி, அதனை வாங்கவும் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இதற்காக பிரதமர் மோடியிடம் பாடம் படிக்க வேண்டும்”. இவ்வாறு புடின் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement