வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்: அறிவியலாளர்களுக்கு பைடன் பாராட்டு| US health agency recommends updated COVID boosters, President Biden calls it “important” milestone

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: மேம்படுத்தப்பட்ட கோவிட் பூஸ்டர் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல் என அறிவியலாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

latest tamil news

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு (வயது 72) கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஜில் பைடன் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட கோவிட் பூஸ்டர் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை: மேம்படுத்தப்பட்ட பூஸ்டர்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் உள்ளன.

முந்தைய டோஸ் போட்டு, 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், தீவிர நோய்க்கு எதிராகப் பாதுகாக்க, புதுப்பிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

latest tamil news

இது குறித்து, ஜோ பைடன் கூறியதாவது: மேம்படுத்தப்பட்ட கோவிட் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல். இது மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.