1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரக உயிரினங்களின் சடலங்களை மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் காட்சிப்படுத்தினார். மெக்ஸிகோ அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட இந்த பதப்படுத்தப்பட்ட சடலங்கள் மனிதர் அல்லாத வேற்றுகிரக உயிரினம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற ஓர் உயிரினம் நமது பூமியில் இல்லை என்று கூறிய பத்திரிகையாளரும் UFO ஆராய்ச்சியாளருமான ஜெய்ம் மௌசான் இந்த இரண்டு சடலங்களும் பெரு நாட்டில் உள்ள குஸ்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், இந்த உயிரினத்தின் டி.என்.ஏ.வில் […]