அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசியதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் இன்று அதிகாலை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694669827_212_F59AUi2bgAAA31X.jpg)
ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படும் ஆர்.பி.வி.எஸ்.மணியன், கடந்த திங்களன்று சென்னை தி.நகரில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது அம்பேத்கர், திருவள்ளுவர்உட்பட பலரை பற்றி ஆர்.பி.வி.எஸ்.மணியன் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக, ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்கள் எழுந்துவந்தன. இந்த நிலையில், அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறாகப் பேசியதாக ஆர்.பி.வி.எஸ்.மணியனை, சென்னை தி.நகரிலுள்ள அவரது வீட்டிலேயே இன்று அதிகாலை தனிப்படை போலீஸார் கைதுசெய்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/6d44e65b-8ab6-4a48-b81e-e78bbeec9e3b.jpeg)
அதைத்தொடர்ந்து போலீஸார் தற்போது, ஆர்.பி.வி.எஸ்.மணியனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், எந்த பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆர்.பி.வி.எஸ்.மணியனை ஆஜர்படுத்தும் வேளையில் கைது குறித்த முழுமையான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY