2023 Tata Nexon.ev – டாடா நெக்ஸான்.ev எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

நெக்ஸான் ICE மாடலை தொடர்ந்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் 2023 நெக்ஸான்.ev எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.94 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாங் ரேஞ்சு (LR) மற்றும் மீடியம் ரேஞ்சு (MR) என இரண்டின் அடிப்படையில் வந்துள்ளது.

டிசைன் வடிவமைப்பினை ICE அடிப்படையாக கொண்டு சிறிய அளவிலான மாற்றங்கள் முன்புற கிரில் அமைப்பில் சிறிய மாற்றத்தை மட்டும் பெற்றுள்ளது. நெக்ஸான்.இவி காருக்கு நேரடியான சவாலினை எக்ஸ்யூவி 400 ஏற்படுத்துகின்றது.

2023 Tata Nexon.ev

டாடா நெக்ஸான் எஸ்யூவி ICE மாடலுக்கு எலக்ட்ரிக் மாடலுக்கு வித்தியாசப்படும் வகையிலான  பம்பர் அமைப்பில் கிரில் , பானெட்டின் கீழ் பகுதியில் எல்இடி பார் கொடுக்கப்பபட்டு, மத்தியில் டாடா லோகோ உள்ளது. பகல்நேர ரன்னிங் லேம்ப் உடன் கூடிய ஸ்பிலிட் ஹெட்லேம்ப் கொண்டுள்ளது. புதிய மாடலில் 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் மேம்பட்ட நிறங்கள் கொண்டு அசத்தலான டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று டாப் வேரியண்டில் 12.3 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது.

நெக்ஸானின் எலக்ட்ரிக் காரில் க்ரீயோட்டிவ் +, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+, ஃபியர்லெஸ்+ S, எம்பவர்டூ மற்றும் எம்பவர்டூ+ என 6 வேரியண்டுகளை நெக்ஸான்.இவி பெற்றுள்ளது.

nexon ev

Long Range (LR) வேரியண்டுகளில் காரின் பவர் 142 bhp மற்றும் 215Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 465 கிமீ பயணிக்கலாம்.

Medium Range (MR) வேரியண்டில் 30 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 215 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 325 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

New Tata Nexon.ev Price list

நெக்ஸான்.இவி அறிமுக ஆரம்ப சலுகையாக ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.94 லட்சம் வரை அமைந்துள்ளது.

nexon ev price

2023 Tata Nexon.ev image gallery

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.