வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெர்னா: ‘டேனியல்’ புயலால் பாதிக்கப்பட்ட கிழக்கு லிபியாவின் டெர்னா நகரில் பலி எண்ணிக்கை 6ஆயிரத்தைஐக் கடந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய தரைக்கடல் பகுதியான அயோனியன் கடலில் உருவான டேனியல் புயல், கடந்த 10ம் தேதி வட ஆப்ரிக்க நாடான லிபியாவைத் தாக்கியது. அங்குள்ள பங்காசி பகுதியில் கரையைக் கடந்த புயல், லிபியாவின் கடற்கரையோர நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, டெர்னா நகரில் கோர தாண்டவம் ஆடிய புயல், அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய நீர்நிலைகள் நிரம்பி, அங்குள்ள அணை உடைந்ததை அடுத்து, 7 அடி உயரத்திற்கு எழும்பிய தண்ணீர், டெர்னா நகரின் அடையாளங்களை முற்றிலும் அழித்துள்ளது.
இதுவரை 6ஆயிரம் பேர் அங்கு பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சாலைகள், கட்டட இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
பேரிடரில் மாயமான 10,000 பேரை தேடும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. அண்டை நாடுகளான எகிப்து, அல்ஜீரியா, துனிசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவும் லிபியாவுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement