வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ரஷ்யா- வட கொரியா இரு நாடுகளும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொண்டால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்க தயங்க மாட்டோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Tamil_News_large_3431770.jpg)
ரஷ்யா சென்றுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் ராக்கெட் ஏவு தளங்களை நேற்று பார்வையிட்டார். ”ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு நிபந்தனையற்ற முழுமையான ஆதரவு அளிப்போம்,” என, அவர் தெரிவித்தார். வட கொரிய அதிபருக்கு, ராக்கெட் ஏவு தளத்தை ரஷ்ய அதிபர் புடின் சுற்றிக் காட்டினார். அப்போது, அங்கிருந்த ராக்கெட்விஞ்ஞானிகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, கிம் தெளிவு பெற்றார்.
இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியிருப்பதாவது: ரஷ்யா, வடகொரிய நாடுகளின் நடவடிக்கை சரியானது இல்லை. ஏற்கனவே இரு நாடுகள் மீது பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/gallerye_150712648_3431770.jpg)
ரஷ்யா- வட கொரியா இரு நாடுகளும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொண்டால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்க தயங்கமாட்டோம். ஐநா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது துரதிருஷ்டவசமானது. எனவே இதில் என்ன நடக்கிறது என்பதை மிக உன்னிப்பாகக் கவனிக்கப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement