நிபா வைரஸ்; அலர்ட் மோடில் அதிகாரிகள் | பட்டினம்பாக்கத்தில் நவீன மீன் அங்காடி – News In Photos

விருதுநகரில் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகள் குறித்து டெமோ செய்து காண்பித்தனர்.
கருமேகக் கூட்டங்களுடன் காணப்படும் தஞ்சாவூர்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து கோவை அருகேயுள்ள கேரள, தமிழக எல்லையான வாளையாறு பகுதியில் மருத்துவக் குழுவினர் கேரளாவிலிருந்து வருபவர்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே பிரப்பன்பலசை கடலில் தேசிய அளவிலான Standup Paddle நீர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
கோவை, உக்கடம் பெரிய குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டிருக்கும் ஜிப் சைக்கிள் ரைடு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாள்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்குவதால், சென்னை கொசப்பேட்டையில் களிமண்ணில் தயாராகும் பிள்ளையார் சிலைகள்.
மத்திய பா.ஜக
அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி:

விநாயகர் சதுர்த்திக்காக தயார்செய்யப்பட்ட கருடன் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலை.

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்று சக்கர சைக்கிள்களை பயனாளிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாநகராட்சி மேயர், ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
ஈரோட்டில் மத்திய அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
புதுச்சேரி:

அரசுப் பள்ளியில் ஆய்வு செய்த கவர்னர் தமிழிசை, மாணவர்களுடன் கலந்துறையாடினார்.

ஈரோடு அ.தி.மு.க மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
பட்டினம்பாக்கம் லூப் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் நவீன முறையில் மீன் அங்காடி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில், வடசேரியில் விற்பனைக்கு வந்திருக்கும் வண்ணமயமான விநாயகர் சிலைகள்.
பட்டினம்பாக்கம் லூப் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் நவீன முறையில் மீன் அங்காடி அமைக்கும் பணி நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.