வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை :பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனர் நரேஷ் கோயலை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம்
உத்தரவிட்டது. இதைஅடுத்து அவர், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
நம் நாட்டில் முன்னணி நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்ததை அடுத்து, கடந்த 2019ல் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. இதற்கிடையே, வங்கியிலிருந்து கடன் பெற்று மோசடி செய்த வழக்குத் தொடர்பாக, அதன் நிறுவனர் நரேஷ் கோயல், 74, மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்
களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. இதையடுத்து, கனரா வங்கிக்கு, 538 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பான பண மோசடி வழக்கில், கடந்த 2ம் தேதி மும்பையில் நரேஷ் கோயலை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.அவரை தங்கள் காவலில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் காவல் நீட்டிப்பு கோரப்படவில்லை. இதையடுத்து அவரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement