சிட்னி, ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சிட்னி நகரம் புகை மண்டலமாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் கோடைக்காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸ் மாகாணங்களில் பற்றி எரியும் தீயால், பல அரியவகை மரங்கள் தீக்கிரையாகியுள்ளன.
ஒரு சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இதனால், தீ அபாயக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, காட்டுத் தீயால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதையடுத்து, காட்டுத்தீ சீசனுக்கு முன்பாக, வனப்பகுதி மற்றும் அதை ஒட்டிய இடங்களில் உள்ள காய்ந்த மரங்கள், சருகுகள், குப்பைகள் போன்றவற்றை எரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் இந்த பணிகளால், சிட்னி நகர் முழுதும் அடர்ந்த புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.
இதையடுத்து, மரங்கள், குப்பைகள் எரிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புகைமண்டலம் குறைந்தபின், இரு நாட்களுக்குப் பின் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement