![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694763013_NTLRG_20230915102533207194.jpg)
மார்க் ஆண்டனி – வெற்றியைத் தருமா 'டைம் டிராவல்'?
ஹாலிவுட் படங்களில்தான் 'டைம் டிராவல்' பற்றிய பல படங்கள் வந்துள்ளன. தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் மிக மிகக் குறைவாகவே வந்துள்ளன. இதுவரையில் தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய டைம் டிராவல் படங்களாக “இன்று நேற்று நாளை (2015), 24 (2016), டிக்கிலோனா (2021), அடியே (2023)” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. 2021ல் வெளிவந்த 'மாநாடு' படம் 'டைம் லூப்' கதையில் வந்த படம்.
இன்று வெளியாக உள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ஒரு 'டைம் டிராவல்' படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியான கதைகளில் சுவாரசியம் தானாகவே இருக்கும். அதை இன்னும் சிறப்பாக்குவதன் மூலம்தான் ரசிகர்களைக் கவர முடியும். இப்படத்தைப் பொறுத்தவரையில் விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோருக்கு இடையிலான போட்டி தான் படத்தின் சுவாரசியம் என்கிறார்கள்.
இப்படத்தின் டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, படத்திற்கும் கிடைக்கும் என படக்குழு எதிர்பார்க்கிறது. போட்டிக்கு வேறு படங்களும் இல்லாதது இப்படத்திற்கு பெரும் ஆறுதல் தரக் கூடிய ஒன்றாக உள்ளது.