வீட்டுக்காவலில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர்? அமெரிக்கா சந்தேகம்| Under House Arrest? US On China Defence Minister Missing For Weeks

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டோக்கியோ: சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷங்பு கடந்த 3 வாரங்களாக பொது வெளியில் காணப்படவில்லை. இதனால், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என ஜப்பானுக்கான இந்திய தூதர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஷேக்ஸ்பியரின் வாசகத்தை மேற்கோள் காட்டி, ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹ்ம் இம்மானுவேல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

1. சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்பு 3 வாரங்களாக பார்க்க முடியவில்லை.

2. ஏற்கனவே திட்டமிட்டபடி வியட்நாம் நாட்டிற்கும் செல்லவில்லை.
3. சிங்கப்பூர் கடற்படை தலைவருடன் திட்டமிட்டபடி சந்திக்கவும் இல்லை. இதற்கு காரணம் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதே காரணமா? ” எனக்கேள்வி எழுப்பி உள்ளார்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கடந்த வாரம் வியட்நாம் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இருந்து அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக கூறியிருந்தது.

கடைசியாக அவர் ஆக.,29 அன்று, ஆப்ரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் உரையாற்றி இருந்தார்.

இதனிடையே, லி ஷங்பு விசாரணைக்கு உட்பட்டிருக்கலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது என உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி, நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.