வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அலற வைத்த ராணுவ குழுவான வாக்னர் எனப்படும் தனியார் ராணுவக் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் வாக்னர் குழு என்ற பெயரில் தனியார் ராணுவ குழு பெரிய ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.இக்குழுவின் தலைவராக இருந்த யெவ்ஜெனி பிரிகோஸ் கடந்தமாதம் விமான விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் பெற்றுக்கொண்டு எந்த நாட்டு ராணுவத்தையும் தாக்கும் அமைப்பாக வாக்னர் குழு என கண்டறியப்படுவதால் அக்குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அறிவிக்கிறது என பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement