வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில், சீக்கிய தொண்டு நிறுவனம் ஒன்று தன்னலம் பாராமல் உதவி செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனை, சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற உக்ரேனிய பத்திரிகையாளர் ஒருவர், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளரிடம் தெரிவித்து நன்றி தெரிவித்து கொண்டார்.
ரஷ்யாவின் தொடர் தாக்குதல் காரணமாக உருக்குலைந்துள்ள உக்ரைனில் வசிக்கும் பல மக்களின் நம்பிக்கையாக, ஒருங்கிணைந்த சீக்கியர்கள் (United Sikhs) அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் உள்ளது. ஐ.நா.,வுடன் தொடர்புடைய, தன்னலம் சாராத அமைப்பான இது, உக்ரைனில் உணவு, மருத்துவ வசதி முதல் புகலிடம் ஏற்படுத்தி கொடுப்பது என பல உதவிகளை செய்து வருகிறது.
போலாந்து உக்ரேனிய எல்லையில், நிவாரண முகாம்களை ஏற்படுத்திய இந்த அமைப்பு, தேவைப்படுவோருக்கு அவசர உதவிகளை ஓய்வின்றி அளித்து வருகிறது. இதனுடன், போர் பகுதிகளில் வெடிகுண்டுகளால் பாதிக்கப்படாத முகாம்களை அமைப்பதுடன், மருத்துவ பயிற்சி அளிப்பதுடன், ஆபத்தை எதிர்நோக்கும்போது உயிர்காக்கும் பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர்.
இதற்காக பலரும் இந்த அமைப்பை பாராட்டி வருகின்றனர். இந்த தகவலை, பகிர்ந்துள்ள ரவீந்திர் சிங் ராபின் என்பவர், இதற்காக உக்ரைனிய பத்திரிகையாளர் ஒருவர், ஜி20 மாநாட்டின் போது தன்னிடம் நன்றியை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement