![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694821871_NTLRG_20230915123222058157.jpg)
கமல் நடிக்கும் 234வது படத்தின் அறிமுக டீசர் விரைவில்…
இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன், அடுத்தபடியாக வினோத் இயக்கும் தனது 233-வது படத்தில் நடிக்கப் போகிறார். அக்டோபர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234வது படத்திற்கான அறிமுக டீசரில் விரைவில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ள கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் இந்த டீசரின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து போன்ற படங்களில் பணியாற்றியவர், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னத்துடன் அவர் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.