ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்தியர்கள்

புதுடெல்லி: ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இணைந்துள்ளார். வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் பந்துவீசுவது என்பது பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவால் என்றாலும், அதில் உச்சம் பெற்ற கிரிக்கெட்டர்களின் பட்டியலும் நீளமானது. ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 இல் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் ஜடேஜா தனது 200வது ஒருநாள் விக்கெட்டை எடுத்தார். ஆறு இந்தியர்கள் மட்டுமே ODI வடிவ கிரிக்கெட்டில் 200 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியவர்கள். இந்தியாவிற்காக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 மற்றும் அதற்கு அதிகமான விக்கெட்களை வென்ற இந்தியர்கள்.

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய  இந்திய பவுலர்களின் பட்டியல்
 
அனில் கும்ப்ளே

இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே 269 போட்டிகளில் 334 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஜவகல் ஸ்ரீநாத்

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் 229 ஒருநாள் போட்டிகளில் 315 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அஜித் அகர்கர்

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான அஜித் அகர்கர் 191 போட்டிகளில் 288 விக்கெட்டுகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஜாகீர் கான்

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 194 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

ஹர்பஜன் சிங்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 234 ஒருநாள் போட்டிகளில் 265 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கபில் தேவ்

இந்தியாவின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவ், 225 ஒருநாள் போட்டிகளில் 253 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரவீந்திர ஜடேஜா

இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்திய பந்துவீச்சாளர் ஆவார். அவர் தனது 182வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்தார்.

அதேபோல, அதிக ODI விக்கெட்டுகளைப் பெற்ற பந்துவீச்சாளர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால்,  இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் எம்.முரளிதரன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 350 போட்டிகளில் 23.08 சராசரி மற்றும் வெறும் 3.93 என்ற விகிதத்தில் 534 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், இலங்கையின் முத்தையா முரளிதரன் 350 போட்டிகளில் 534 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை அடுத்து, பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம், 502 விக்கெட்டுகளை ஒருநாள் கிரிக்கெட்டிற்காக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நம்பர் 1 ஒருநாள் பந்து வீச்சாளர் என்றால் அது இந்தியாவின் முகமது சிராஜ் என்று கூறலாம். அவர் 21 ஒருநாள் போட்டிகளில் 20.73 சராசரி மற்றும் 4.61 என்ற பொருளாதார விகிதத்தில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவ்ர் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்பது விக்கெட்டுகளையும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்தவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.