டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள் – TVS X electric scooter on-road Price and Specs

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அறிமுகம் செய்துள்ள X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நவீன தலைமுறையினர் விரும்புகின்ற வடிவமைப்பினை கொண்டுள்ளது. எக்ஸ் ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, நிறம், பேட்டரி, ரேஞ்சு மற்றும் சிறப்பம்சங்கள் அறிந்து கொள்ளலாம்.

TVS X Escooter

டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள XLeton பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ் எலக்ட்ரிக் மாடலில் 4.4 Kwh பேட்டரி கொண்டு 7 kw பவரை வழங்கும் PMSM மோட்டார் அதிகப்படியான பவர் 11 Kw வெளிப்படுத்தும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 140 கிமீ ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்டெல்த், ஸ்டிரைட் மற்றும் சோனிக் என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.

0-40 Kmph வேகத்தை எட்டுவதற்கு 2.6 வினாடிகள் போதுமானதாக உள்ளது. 950W சார்ஜரை கொண்டு 0-80 % சார்ஜிங் செய்ய 3 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஹோம் ரேபிட் சார்ஜர் 3 KW பயன்படுத்துவதன் மூலம் 0-50 % சார்ஜிங் பெற 50 நிமிடங்கள் போதுமானதாகும்.

TVS X மாடலில் 10.25-இன்ச் TFT கிளஸ்ட்டரை பெறுகிறது.  ரைடருக்கு ஏற்றவாறு எந்த கோணத்திலும் சரிசெய்யப்படும் வகையில் X-tilt அம்சத்துடன் பிரமாண்டமான டேஷில் புளூடூத் இணைப்பு, இசையை இயக்குதல் மற்றும் நேவிகேஷன், விழிப்பூட்டல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்ற எக்ஸ் பேட்டரி ஸ்கூட்டரில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 195 மிமீ டிஸ்க் உள்ளது. 12 அங்குல அலுமினிய அலாய் வீலின் முன்புறத்தில் 100/80-12 மற்றும் பின்புறத்தில் 110/80-12 டயர் உள்ளது.

1285 மிமீ வீல்பேஸ் கொண்ட டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 175 மிமீ மற்றும் இருக்கை உயரம் 770 மிமீ ஆக உள்ளது.

TVS-X-electric-scooter chassis

டிவிஎஸ் எக்ஸ் நுட்பவிபரங்கள்

மோட்டார்
வகை ஏலக்ட்ரிக்
மோட்டார் வகை BLDC மோட்டார்
பேட்டரி 4.4 Kwh Lithium ion
அதிகபட்ச வேகம் 105 Km/h
அதிகபட்ச பவர் 7 KW Nominal/ 11 kw Peak
அதிகபட்ச டார்க் 40 Nm
அதிகபட்ச ரேஞ்சு 140Km/ charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் 4 மணி நேரம் (0-100%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Xtealth, Xtride and Xonic
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 220 mm
பின்புறம் டிஸ்க் 195 mm (with ABS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 100/80-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர் 110/80-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 950 W, 3Kw
கிளஸ்ட்டர் 10.25 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம்
அகலம்
உயரம்
வீல்பேஸ் 1285 mm
இருக்கை உயரம் 770 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 175 mm
பூட் கொள்ளளவு 34 Litre
எடை (Kerb) 107 kg

டிவிஎஸ் எக்ஸ் நிறங்கள்

ஒற்றை சிவப்பு நிறத்தை மட்டும் டிவிஎஸ் எக்ஸ் பெறுகின்றது.

TVS X led headlight

TVS X Electric scooter on-road price in TamilNadu

தமிழ்நாட்டில் டிவிஎஸ் எக்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,49,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக 950W சார்ஜரை ரூ.16,275 (ஜிஎஸ்டி வரி உட்பட) கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

அடுத்து டிவிஎஸ் அறிவித்துள்ள 3kW ஃபாஸ்ட் சார்ஜரின் விலை அறிவிக்கப்படவில்லை.

TVS X Electric scooter – ₹ 2,64,909 + 16,275 (950w charger)

சென்னை மாநகரில் ஜனவரி 2024 மற்றும் கோவையில் மார்ச் 2024க்குள் கிடைக்க துவங்கும். மற்ற மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படுவதற்கு அடுத்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம்.

TVS X rivals

டிவிஎஸ் எக்ஸ் மின்சார ஸ்கூட்டருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை.

Faqs about TVS X

TVS X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பவர் விபரம் ?

7 kW (9.38 bhp) மின்சார மோட்டார் அதிகபட்சமாக 11 kW (14.75 bhp) , தொடர்ச்சியாக 7 கிலோவாட் வழங்குகின்றது. டார்க் 40 Nm ஆக உள்ளது.

டிவிஎஸ் எக்ஸ் டாப் ஸ்பீடு எவ்வளவு ?

டிவிஎஸ் எக்ஸ் பேட்டரி ஸ்கூட்ட,ரின் டாப் ஸ்பீடு 105 kmph ஆக உள்ளது.

டிவிஎஸ் எக்ஸ் ஆன்-ரோடு விலை எவ்வள்வு ?

TVS X Electric scooter ஆன்-ரோடு விலை ₹ 2,64,909 + 16,275 (950w charger)

டிவிஎஸ் எக்ஸ் சார்ஜிங் நேரம் எவ்வள்வு ?

ஹோம் ரேபிட் வேகமான 3 கிலோவாட் சார்ஜர் மூலம் 0-50 சதவீத சார்ஜிங்கை 50 நிமிடங்கள் போதுமானதாகும். 950W சார்ஜர் மூலம், 0-80 சதவீதம் சார்ஜ் ஆனது 4 மணி 30 நிமிடங்களில் தேவைப்படும்.

டிவிஎஸ் X ரைடிங் மோடு எத்தனை ?

எக்ஸ் மாடலில் Xtealth, Xtride மற்றும் Xonic என மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. இவற்றில் Xonic மோடு அதிகபட்ச வேகத்தை எட்டும்.

TVS X escooter image Gallery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.