100 வருடங்களை விடப் பழமையான யடியந்தோட்டை – கராகொட பாலத்தை நவீனமயப்படுத்திப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன சபரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் தலைமையில் இந்நிகழ்;ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்காக 360 மில்லியன் ரூபா நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் சப்ரகமுவ மாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது இராஜாங்க அமைச்சர்களான ஸ்ரீபால கம்லத், ரஞ்சித் சியம்பலாபிடிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.