நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் கடந்த வாரம் ( செப் 13) திருநெல்வேலியில் தமிழ் முறைப்படி நடைபெற்றது
உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். அவர்களின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. பலரும் சமூக வலைதளங்களில் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். சிலர் கீர்த்தி பாண்டியனை ஏன் அசோக் செல்வன் திருமணம் செய்துக்கொண்டார்.
அசோக் செல்வன் அளவிற்கு கீர்த்தி பாண்டியன் ஒன்றும் அழகில்லை என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு சில மீம்ஸ்களையும் பகிர்ந்து வந்தனர்.
இதற்கு பலர் எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் பதில் அளிக்கும் விதமாக தனது மனைவி கீர்த்தி பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,” உலகின் மிக அழகான பெண்ணுடன் ” (with a most beautiful women in the world) என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.
தற்போது அசோக் செல்வனின் இந்தப் பதிவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அசோக் செல்வவன் நிறம், உருவம் குறித்துப் பேசிய பழைய காணொளி ஒன்றைப் பகிர்ந்து அசோக் செல்வனைப் பாராட்டியும் வருகின்றனர்.