தைப்பி நகர்: தைவானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜெர்மன் புவியியல் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தைவானின் வடகிழக்கு மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 171 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement