இரண்டாம் முறையாக 500 மில்லியன் கடந்த 'அரபிக்குத்து'
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'பீஸ்ட்'. அப்படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் வெளியான போதே 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆனது.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 'அரபிக்குத்து' பாடலின் லிரிக் வீடியோ யு டியுபில் வெளியானது. அந்த லிரிக் வீடியோ கடந்த ஜனவரி மாதம் 500 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.
'அரபிக்குத்து' பாடலின் முழு வீடியோ கடந்த வருடம் மே மாதம் வெளியானது. தற்போது அந்த வீடியோ பாடலும் 500 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படி லிரிக் வீடியோ, பாடல் வீடியோ இரண்டுமே 500 மில்லியன் பார்வைகளைக் கடப்பது இதுவே முதல் முறை.
யு டியூபில் 'மாரி 2' படத்தில் யுவன் இசையில் வெளிவந்த 'ரவுடி பேபி' பாடல் 1498 மில்லியன் பார்வைகளுடன் தமிழ் சினிமா பாடல்களில் முதலிடத்தில் உள்ளது. 1500 மில்லியன் பார்வைகளை இப்பாடல் சீக்கிரம் தொடலாம்.