திருப்பதி: புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை கோலாகலமாக கொடியேறியது. புரட்டாசி திருமலை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. திருமலை திருப்பதியில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி. பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட ‘பெருந்தேவி’ என்றழைக்கப்பட்ட ‘சமவை’ என்பவர்தான் முதன்முதலில் […]