ஜி20 மாநாட்டிற்கு தலைமையேற்ற இந்தியாவிற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி: அமெரிக்கா| Thanks to India and PM Modi for chairing G20 summit: US

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: டில்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருந்தார். இதற்காக மாநாட்டிற்கு தலைமை ஏற்ற இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக அமெரிக்க கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி ஜான் கிர்பி கூறியதாவது: ஜி20 மாநாட்டில் அதிபர் பைடன், நேர்மறையுடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்டார். ஜி20 மாநாட்டில் ஏராளமான சிறந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக, மாநாட்டிற்கு தலைமையேற்ற இந்தியாவிற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். பைடன் டில்லியில் இருந்த நாட்கள் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. இவ்வாறு ஜான் கிர்பி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.