மோகன்லால் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த அஜித்

நடிகர் அஜித் துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் தொடங்க சற்று காலதாமதமாகி வருவதால் வழக்கம்போல தனது பைக் சுற்றுப்பயணத்தை துவங்கி விட்டார் அஜித். அப்படி சமீபத்தில் ஓமன் நாட்டில் அஜித் பைக் பயணம் மேற்கொண்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. இந்த சுற்றுப்பயணத்தில் அரபு நாடு முழுவதும் பைக்கில் பயணிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் துபாயில் புர்ஜ் கலிபா பகுதியில் நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான பிளாட்டிற்கு விசிட் அடித்த அஜித், அங்கு மோகன்லாலை சந்தித்துள்ளார். பிரபல தொழிலதிபரான சமீர் ஹம்சா என்பவர் இவர்கள் இருவரது சந்திப்பின் பின்னணியில் முக்கிய நபராக இருந்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் மோகன்லாலுடன் இதற்கு முன்பு நடிகர் விஜய் ஜில்லா படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதேபோன்று மோகன்லாலும் அஜித்தும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு முறை பரபரப்பு செய்தி வெளியானது. அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் அது இருந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக சந்தித்துள்ளது இரு தரப்பு ரசிகர்களையும் குஷிப்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.