ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில், கடந்த 7 நாட்களாக பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல் நடந்து வந்தது.
இதில், இன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உஜைர் கான் சுட்டுக்கொல்லப்பட்டார். இத்துடன் என்கவுன்டர் முடிவுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அருகில் மற்றொரு பயங்கரவாதி உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement