வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் கர்நாடக எம்.பி.,க்கள் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
புதுடில்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மற்றும் கர்நாடக எம்.பிக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆலோசனைக்குப்பிறகு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங்செகாவத்தை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக நாளை பார்லிமென்ட் வளாகத்தில் கர்நாடக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதனிடையே கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், காவிரியில் கூடுதல் நீர் திறக்க தமிழ்நாடு வலியுறுத்தக்கூடாது. அதேநேரத்தில் தமிழ்நாடு அணைகளில் தண்ணீரை வீணடிக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பது தொடர்பாக கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்தது. இதனையடுத்து அமைச்சர் துரை முருகன்தலைமையில் அனைத்துகட்சி எம்.பிக்கள் குழு டில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். இதனையடுத்து கர்நாடக அணையில்இருந்து காவரியில் 3,834 கன அடி நீர் திறக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement