பெங்களூரு, : ‘பெங்களூரில் கண்ட இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டும் பட்சத்தில், ஒரு டன்னுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு நகரில் கண்ட இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் பலரும் கேட்டபாடில்லை. இந்நிலையில், புதிய விதிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:* கட்டட கழிவுகள் ஆரம்பத்திலேயே அகற்ற பொறுப்பு உரிமையாளருக்கு உரியது* விஞ்ஞான ரீதியாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் தான் கொட்ட வேண்டும்* கண்ட இடங்களில், சாலைகளில் கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்* விதிமுறை மீறி கண்ட இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டும்பட்சத்தில், ஒரு டன்னுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
* வார்டு கண்காணிப்பாளர்கள், சுகாதார அதிகாரிகள், மார்ஷல்கள் தங்கள் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement