சைபர் மோசடி வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகம் வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அவற்றை தடுக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது TRAI எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொலைத்தொடர்பு பயனர்களுக்கு மெசேஜ் மூலம் TRAI எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் பயனர்கள் 5ஜி நெட்வொர்க்கிற்கு சிம் கார்டை அப்கிரேட் செய்யப் போகிறார்கள் என்றால், அவர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கவனிக்காவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே TRAI-ன் இந்த 5G சிம் அப்கிரேடு தொடர்பான எச்சரிக்கை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் சிம்மை மேம்படுத்தும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்:
– தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G சிம்மை இயக்க பயனர்களிடம் OTP-ஐக் கேட்பதில்லை என்று பயனர்களின் தொலைபேசிகளுக்கு TRAI எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.
– இதுமட்டுமின்றி வேறு எந்த விதமான தகவல்களும் கேட்கப்படுவதில்லை. உங்கள் சிம்மை மேம்படுத்தும் சாக்கில் OTP அல்லது வேறு விவரங்களைக் கேட்டால், அவற்றை கொடுக்க கூடாது
– உங்கள் சிம்மை 5Gக்கு மேம்படுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்பட்டு, அதைக் கிளிக் செய்யும்படி கேட்கப்பட்டால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
–
இந்த வகையான இணைப்பு இணைய மோசடியின் கீழ் அனுப்பப்படுகிறது. தவறுதலாக இந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் பணத்துடன் உங்களின் விவரங்களும் திருடப்படலாம்.
– பல நேரங்களில் ஹேக்கர்கள் பயனர்களை 5G க்கு மேம்படுத்த வழங்குகிறார்கள். இதில் பல வகையான ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
– இது வாடிக்கையாளர்களை பேராசையின் கீழ் வீழ்த்தும் யுக்தி. இந்த பொறியில் நீங்கள் சிக்கினால் பின்விளைவுகளை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
– மோசடிக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலிலும் வாடிக்கையாளர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது அவசியம். எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் மையத்தை அணுகி, அங்கு கொடுக்கப்படும் வழிமுறைகளின் அடிப்படையில் நீங்கள் உங்கள் சிம்கார்டை 5ஜிக்கு அப்கிரேடு செய்யுங்கள்.